கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2-வது நாளாக 17 ஆயிரம் கன அடி நீர் வருகை

Karnataka-Dam 2021 09 17

கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும்  கிருஷ்ணாராஜா சாகர் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக, அந்த அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 21,346 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 3 நாட்களாக ஒகேனக்கல், பிலிகுண்டுலு பகுதிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று முன் தினம் காலை நீர்வரத்து அதிரடியாக உயர்ந்து 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

 

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் அதே நிலை தொடர்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று மாலை தமிழக எல்லையை வந்தடைந்தது. கர்நாடகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து