முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேய் வசித்த வீட்டில் வாழ்ந்தேன்: ஹேமமாலினி திகில் பேட்டி

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

பா.ஜ.க. மூத்த நடிகை ஹேம மாலினி, திரைப்பட படப்பிடிப்பு காலங்களில் பேய் வசித்த வீட்டில் வசித்ததாக பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். பாலிவுட் மூத்த நடிகையும், பா.ஜ.க. எம்பியுமான ஹேம மாலினி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘எனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில், சில நாட்கள் பேய் வசித்த வீட்டில் வசித்து வந்தேன். ‘ஸ்வப்னா சவுதாகர்’ (1968) என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக பாந்த்ராவில் உள்ள மன்வேந்திரா அடுக்குமாடி குடியிருப்பில் தங்கினோம்.

அந்த பிளாட் மிகவும் சிறியதாக இருந்தது. அதன் பிறகு ஜூஹுவின் 7-வது சாலையில் உள்ள பங்களாவில் தங்கினோம். அந்த பங்களாவில் என் தாயுடன் தூங்கினேன். அப்போது, அங்கு தங்கிய ஒவ்வொரு நாள் இரவும் யாரோ  ஒருவர் என்னுடைய கழுத்தை நெரிப்பது போல் உணர்ந்தேன். 

இந்த விஷயங்கள்  கொஞ்சம் விசித்திரமாகத் தெரியலாம். ஆனால், அது உண்மை. ஒரு முறை அல்லது இரண்டு முறை நடந்திருந்தால் கூட அதைப் புறக்கணித்திருக்கலாம், ஆனால், மீண்டும் மீண்டும் யாரோ என்னுடைய கழுத்தை நெரிப்பது போல் உணர்ந்தேன்.

 

அப்போதெல்லாம், ஒருவித அச்ச உணர்வுடனே இருந்தேன். அதன் பிறகு நாங்கள் அந்த வீட்டை காலி செய்துவிட்டு, சொந்தமாக தனி குடியிருப்பை விலைக்கு வாங்கினோம்’ என்றார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ‘பேய்’ சம்பவத்தை ஹேமா மாலினி தற்போது பகிர்ந்துள்ளதால், சமூக ஊடகங்களில் பேய் குறித்த அனுபவங்களையும், அதுதொடர்பான மூடநம்பிக்கை குறித்தும் பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து