முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விமானப்படைக்கு மிராஜ் 2000 ரக விமானங்களை வாங்க உள்ளதாக தகவல்

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

இந்திய விமானப்படைக்கு 24 second - hand மிராஜ் 2000 போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சுமார் 35 ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் உள்ள மிராஜ் 2000 கார்கில் போர் காலகட்டத்தில் இருந்தே முன்னணி போர் விமானமாக உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பாலகோட் தாக்குதலின் போதும் மிராஜ் போர் விமானங்கள் சிறப்பாக செயல்பட்டன. அவற்றை மேம்படுத்த வேண்டிய சூழலில் மிக முக்கியமான 300 உதிரி பாகங்களுக்கு உடனடி தேவை ஏற்பட்டுள்ளது.

எனவே second - hand முறையில் 24 மிராஜ் போர் விமானங்களை வாங்கி அவற்றின் உதிரி பாகங்களை பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒரு விமானம் 11.25 லட்சம் யூரோக்கள் என்ற விலையில் 2.7 கோடி யூரோக்களுக்கு இந்த விமானங்கள் வாங்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்டெய்னர்களில்  இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிராஜ் 2000 வகை விமானங்களின் சிறப்புகள்

1. ஒற்றை என்ஜின் கொண்ட 4-ம் தலைமுறை போர் விமானமான மிராஜ் 2000-ஐ, ரஃபேல் போர் விமானத்தை தயாரிக்கும் பிரான்ஸின் தஸால்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

2. அமெரிக்காவிடமிருந்து எஃப்16 வகை விமானங்களை பாகிஸ்தான் வாங்கியதைத் தொடர்ந்து, மிராஜ் 2000 வகை விமானங்களுக்கு 1982-ம் ஆண்டில் இந்தியா ஆர்டர் கொடுத்தது. அப்போது, 36 விமானங்களை இந்தியா கொள்முதல் செய்தது.

3. 1999-ம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில் மிராஜ் 2000 விமானங்கள் சிறப்பாக செயல்பட்டன. அப்போது 514 முறை பறந்து சென்று 55,000 கிலோ அளவுக்கு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி எதிரி படையினரின் பதுங்கு குழிகளை அழித்தன.

4. இந்த விமானம் இந்தியாவின் மற்ற போர் விமானங்களைவிட இலகு ரகமானது. இந்தியாவின் அதிநவீன போர் விமானமான சுகோய் எஸ்.யு.-30.எம்.கே.ஐ.-வைவிட அதிநவீனமானது. அதிகபட்சமாக மணிக்கு 2,336 கிலோமீட்டர் வேகத்திலும், குறைந்தபட்சம் 2,120 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும்.

5. இந்த விமானம் வானிலிருந்து வானில் உள்ள இலக்கை நோக்கியும், வானிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கை நோக்கியும் ஏவுகணைகளை செலுத்தும் திறன் பெற்றது. லேசர் அடிப்படையிலான குண்டுகளையும் சுமந்து செல்லும். இவ்வளவு சிறப்பம்சங்களைப் பெற்றிருப்பதாலேயே பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்காக மிராஜ் 2000 வகை விமானத்தை இந்திய விமானப்படை தேர்வு செய்துள்ளது.

6. கார்கில் போரில் அற்புதமாக செயல்பட்டதைத் தொடர்ந்து, மிராஜ் வகையைச் சேர்ந்த மேலும் 10 விமானங்களை வாங்க 2004-ம் ஆண்டில் இந்திய ஒப்பந்தம் மேற்கொண்டது.

7. 2011-ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மிராஜ் 5-எம்.கே. வகையைச் சேர்ந்த விமானங்களுக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.

 

8. மிராஜ் போர் விமானங்கள், இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் பெற்றவை. பழமையான மற்றும் நவீன வகை ஆயுதங்களின் இலக்குகளை நோக்கி வீசும் தன்மை கொண்டவை இதனாலே அதனை மீண்டும் இந்திய விமாப்படை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து