முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடியில் ஒருவன் – விமர்சனம்

சனிக்கிழமை, 18 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

தன்து தாயின் சபதத்தை நிறைவேற்ற கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. அங்கு அரசு குடிசை மாற்று வாரியப் குடியிருப்பில் தங்கி ஏழை மாணவர்களுக்கு ட்யூஷன் எடுத்தபடியே ஐஏஎஸ் படிக்கிறார்.

ஐஏஎஸ் எழுதி கலெக்டர் ஆகி, ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் விஜய் ஆண்டனி, காலச் சூழலால்  அரசியல்வாதியாகிறார். குக்கிராமத்தில் பிறந்து எப்படி கோடியில் ஒருவனாக மாறுகிறார் என்பதுதான் கதை. ‘பிச்சைக்காரன்’ படத்தில் அம்மா செண்டிமெண்ட் அட்டகாசமாகப் பொருந்தியதால், மறுபடியும் அதே கதைக் களத்தை கையில் எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

தென்றல் காற்று,  மிதமான மழையாக இருக்கும் படத்தின் முதல் பாதி. சூராவளி, புயல், சுனாமியாக என சுழன்றடிக்கிறது இரண்டாம் பாதி. ஒரு கட்டத்தில் அடியை வாங்கிக்கொண்டு பொறுமையாக இருக்கும் போது அவரிடம் ட்யூசன் படிக்கும் ஒரு மாணவன் ‘என்ன சார் உங்களுக்கு கோபமே வராதா.. ஒருத்தன் அடிச்சா திருப்பி அடிக்க மாட்டீங்களா?’ என்று கேட்க, அதற்கு ‘உங்க லட்சியத்தை நோக்கிப் போகும்போது பல தடைகள் வரும்.

அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தாண்டி போயிட்டே இருக்கணும். அப்பத்தான் உங்க இலக்கை அடைய முடியும்’ என்று உதட்டில் ரத்தம் வழிய சொல்லும்போது எதார்த்த நடிப்பில் பின்னுகிறார். நாயகி ஆத்மிக, வில்லன் சுரஜ்  திவ்ய பிரபா இவர்களின் நடிப்புடன் ஒளிப்பதிவும் இசையும் அருமை. மொத்தத்தில் கோடியில் ஒருவனைக் கொடுத்த இயக்குனர் அனந்த கிருஷ்ணுக்கு வாழ்த்துக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து