விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 4 பேர் பூமிக்கு பத்திரமாக திரும்பினர் எலன் மஸ்க் வாழ்த்து

Space-Travel 2021 09 19

Source: provided

வாஷிங்டன்: உலகின் மிக பிரபலமான தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலன் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இன்ஸ்பிரேஷன் 4 என்னும் விண்வெளி சுற்றுலா பயணத் திட்டத்தைத் தொடங்கினார். 

இது பொதுமக்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் திட்டமாகும். இந்த திட்டத்தின்படி கடந்த வியாழக்கிழமை, 'பால்கன் 9' ராக்கெட்டில் 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்தனர்.  3 நாட்களாக பூமியிலிருந்து 375 மைல் (575 கி.மீ) உயரத்தில்  விண்வெளியில் இருந்தனர். 

விண்வெளி சுற்றுலா மேற்கொண்ட நான்கு பேரும் பத்திரமாகத் தரையிறங்கினர். அட்லாண்டிக்கில் புளோரிடோ கடற்கரையில் அவர்கள் பாதுகாப்பாக தரை யிறங்கினர். இதன் வீடியோவை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இதையடுத்து விண்வெளி சென்று திரும்பியவர்களுக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலன் மஸ்க் வாழ்த்து தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து