முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் சேதுபதியுடன் ஸ்ரீசாந்த்

செவ்வாய்க்கிழமை, 21 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

நடிகர் விஜய் சேதுபதியை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சந்தித்து உரையாடியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், “உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா’ என்று உற்சாகமுடன் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்ததையடுத்து மாநில கிரிக்கெட் அணியில் தற்போது விளையாடி வருகிறார்.

ஐ.பி.எல். ஒளிபரப்புக்கு தடை

தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறியவர்கள், ஆண்கள் என அனைவரும் போட்டியை நேரில் பார்த்து ரசிக்கிறார்கள். ஐ.பி.எல் போட்டிகள் என்றாலே விசில், ஆட்டம் இல்லாமல் இருக்காது.

உற்சாகத்திலும், தங்களுடைய அணி வீரர்களை உற்சாகப்படுத்தவும் பெண்களும் ஆட்டம் போடுவார்கள். ஆனால் ஆப்கனில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான முடிவகளை எடுத்து வரும் தலிபான்கள், பெண்கள் போட்டியை பார்ப்பதாலும் ரசிகர்கள் ஆட்டம் போடுவதாலும் ஐ.பி.எல். போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்பக்கூடாது என்று ஊடகங்களுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய மகளிர் அணி தோல்வி

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் என மூன்று தொடர்களில் பங்கேற்கிறது இந்திய மகளிர் அணி. முதல் ஒருநாள் ஆட்டம் மெக்கேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு பேட்டிங் செய்த ஆஸி. அணி, சிறப்பாக விளையாடி 41 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து முதல் ஒருநாள் ஆட்டத்தை எளிதாக வென்றது. 

கோலி குறித்து பிராட் ஹாக்

கேப்டன் பதவியை உதறியுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, தெண்டுல்கரின் 100 சதங்கள் அடிக்கும் சாதனையை சமன்செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர். அவர் டெஸ்டில் 51 சதங்களும், ஒரு நாள் போட்டியில் 49 சதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து