முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்கள் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது பஞ்சாப் கேப்டன் கே.எல். ராகுல் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 26 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சார்ஜா: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 5 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. சிறப்பாக செயல்பட்ட பஞ்சாப் பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ராகுல் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிளே-ஆஃப் சுற்று...   

பிளே-ஆஃப் சுற்று வாய்ப்புக்கு பஞ்சாப் அணி எஞ்சி உள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஐதாராபாத்துக்கு எதிராக பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். அதன் மூலம் அந்த அணி பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. வெற்றி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

எதிர்பார்ப்பு... 

இந்த வெற்றி மூலம் பஞ்சாப் கிங்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று நம்புகிறேன். ஹோல்டர் அற்புதமாக விளையாடினார். அவர் ஒரே ஓவரில் என்னையும் மயங்க் அகர்வாலையும் அவுட் செய்தார். பேட்டிங்கையும் சிறப்பாக செய்தார். ஆடுகளத்தில் வேகம் இல்லை. நீங்கள் ஒரு நல்ல ஸ்கோரை எடுத்தால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

பந்து வீச்சாளர்கள்...

இந்த ஆடுகளம் 160-170 ரன் எடுக்கும் ஆடுகளம் அல்ல என்பதும் அதிக ஷாட்டுகளை விளையாட கூடாது என்பதும் பேட்ஸ்மேன்களுக்கான பாடம். இதை யாராவது உணர்ந்து இருந்தால் நாங்கள் 140 ரன் எடுத்திருக்கலாம். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முகமது ‌ஷமி தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எளிதானதல்ல... 

ஹர்பீர்த் பிரார் ஒரு சிறந்த ஆல்-ரவுண்ட் கிரிக்கெட் வீரர் என்று நான் நினைக்கிறேன். அவர் எங்களுக்காக ஆட்டத்தை முடித்து வைத்தார். அவர் உயரமான பந்து வீச்சாளர். அவரது பந்தில் அடித்து விளையாடுவது எளிதானதல்ல. ஒவ்வொரு முறையும் அவருடன் நான் செல்லும் போது, கவலைப்படாதே நான் ரன்களை விட்டு கொடுக்க மாட்டேன் என்று கூறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து