பெங்களூருவில் 11-ம் தேதி வரை தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு

Bangalore 2021 09 28

ஏற்கனவே பெங்களூருவில பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவும் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கொரோனா காரணமாக இரவு நேர ஊரடங்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவையும் வருகிற 11-ம் தேதி வரை நீட்டித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

 

பெங்களூருவில் கொரோனா காரணமாக 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. தற்போது இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கிறது. கொரோனா காரணமாக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே பெங்களூருவில பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவும் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு பஸ், ரெயில், விமான நிலையங்களுக்கு பொருந்தாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து