முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 45 லட்சம் இழப்பீடு: உத்தரப்பிரதேச அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 4 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : உத்தரப்பிரதேச மாநில லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 45 லட்சம் இழப்பீடு வழங்குவதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றதாகவும், இதனால் கார்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதியதாகவும் பின்னர் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பாஜகவினர் 4 பேர் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். உ.பி. வன்முறை தொடர்பாக நடவடிக்கை  எடுக்கக்கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில், வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 45 லட்சமும் காயமடைந்தோருக்கு ரூ. 10 லட்சமும் வழங்கப்படும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

மேலும், இந்த வன்முறை குறித்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்றத்தின் நீதிபதி மூலமாக  விசாரணை நடத்தப்படும் என்றும், அடுத்த 8 நாட்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்வதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ஜெனரல் பிரஷாந்த் குமார் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து