முக்கிய செய்திகள்

நிவின்பாலியுடன் இணையும் அஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      சினிமா
A  cali 2021 10 12

Source: provided

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,  இயக்குநர் ராம் டைரக்சனில் தனது ஐந்தாவது படத்தை தயாரிக்கிறது வி ஹவுஸ். இப்படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. 

நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கின்றார். மேலும் இந்தப்படத்தில் சூரி  முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - ஏகாம்பரம், கலை - உமேஷ் ஜே குமார், மக்கள் தொடர்பு - A. ஜான், தேசிய விருது பெற்ற இயக்குநர் ராமின் இந்த புதிய படைப்பு இப்போதே எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து