Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய இன்று முதல் அனுமதிக்கப் படுகின்றனர்.

மலையாள காலண்டரின் படி துலா மாத பிறப்பை முன்னிட்டு துலா பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது ஆகம விதிகளின்படி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி விளக்கு ஏற்றி சடங்குகளை செய்ய உள்ளார்.

இன்று முதல் வழக்கமாக பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இதனால் இன்று அதிகாலை 5 மணியில் இருந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கோவில் நடை வருகிற 21-ம் தேதி வரை திறந்திருக்கும். அன்றைய தினம் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

தற்போது நடைமுறையில் உள்ள தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு, கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். “நெகட்டிவ்’’ சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்திக் கொண்டதற்காக சான்றிதழ் ஆகியவற்றை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்கள், ஆர்.டி.பி. சி.ஆர். “நெகட்டிவ்’’ சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் இல்லாதவர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் சபரிமலைக்கான புதிய மேல் சாந்தி இன்று தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுகிறார். துலா மாத பூஜைகள் முடிந்தபிறகு வருகிற 21-ந்தேதி கோவில் நடை அடைக்கப்படுகிறது. அதன் பிறகு நவம்பர் 2-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு மறுநாளே மூடப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து