எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனிக்கு விரைவில் 2-வது குழந்தை பிறக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. 40 வயதாகும் எம்.எஸ். டோனி கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி சாக்ஷி என்பரை திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ். டோனி- சாக்ஷி தம்பதிக்கு கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஜிவா எனப் பெயர் சூட்டியிருந்தார்.
ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை எம்.எஸ். டோனியின் மனைவி மகள், சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா மற்றும் குழந்தைகள் கொண்டாடினர். இந்த நிலையில் டோனியின் மனைவி சாக்ஷி கர்ப்பமாக உள்ளார். விரைவில் ஜிவாவுக்கு சகோதரி அல்லது சகோதரன் வரப்போகிறான் என்ற செய்தியை பிரியங்கா ரெய்னா உறுதிப்படுத்தியதாக இணைய தளங்களில் செய்திகள் காட்டுத்தீ போன்று பரவி வருகிறது.
கால்பந்து போட்டியில் துப்பாக்கி சூடு - பதற்றம்
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் லாட்-பீபிள்ஸ் ஸ்டேடியத்தில் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், போட்டி முடிவடையும் தருணத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதில் 4 பேர் காயமடைந்து உள்ளனர். ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு நடந்தவுடன், ரசிகர்கள் இடையே கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
இதனால், அவர்கள் தப்பி செல்வதற்காக முயன்றுள்ளனர். இதனை தொடர்ந்து, விளையாட்டு வீரர்களை பாதுகாப்பிற்காக கீழே படுத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. மொபைல் நகர போலீசார் சந்தேகத்திற்குரிய வகையிலான 2 பேரை தேடி வருகின்றனர். அவர்கள் தாக்குதல் நடத்தி விட்டு காரில் தப்பி சென்று விட்டனர்.
சாதனை சிறுவனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சர்வேஷ். கடந்த அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரையிலான 750 கிலோமீட்டர் தொடர் ஓட்டத்தை சர்வேஷ் தொடங்கினார். இந்த தொடர் ஓட்டத்தை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிலையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 750 கிலோமீட்டர் தூரத்தை 14 நாட்கள் தொடர் ஓட்டம் மூலம் கடந்து சர்வேஷ் சாதனை படைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பசி, பட்டினியின்மை, நல்ல ஆரோக்கியம், தரமான கல்வி, வறுமை ஒழிப்பு உட்பட 17 நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தொடர் ஓட்டம் ஓடியதாக சிறுவன் சர்வேஷ் தெரிவித்து உள்ளார் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள சர்வேஷ்-ஐ முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இளம் வீரர் பரோட் மாரடைப்பால் மரணம்
ரஞ்சிப் போட்டிகளில் செளராஷ்ட்டிரா அணிக்காக விளையாடி வந்த இளம் பேட்ஸ்மேன் அவி பரோட் (29) மாரடைப்பால் காலமானார். அவி பரோட்டின் இறப்பை சைராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணிக்கு 2011 ஆம் ஆண்டில் அவி பரோட் கேப்டனாக இருந்தார்.
மேலும் 2019-20ஆம் ஆண்டு ரஞ்சித் தொடர்களில் சௌராஷ்ட்ரா அணி வெற்றிபெற காரணமாக இருந்த இவர், ஹரியானா மற்றும் குஜராத் அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார். இவரது இறப்பு அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாக சௌராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருக்கிறது.
சென்னை அணியில்தான் இருக்கிறேன் - டோனி
ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. அப்போது அவர் கூறியதாவது., நான் இன்னும் நான் சென்னை அணியில்தான் இருக்கிறேன், எங்கும் போகவில்லை.
தென் ஆப்பிரிக்கா, துபாய் என எங்கு விளையாடினாலும் ஆதரவு கொடுத்து வரும் சென்னை அணி ரசிகர்களுக்கு நன்றி. அடுத்த ஆண்டு சென்னையில் மீண்டும் ரசிகர்கள் முன் விளையாடுவோம் என உற்சாகமாக தெரிவித்தார்.
சென்னை அணிக்கு முதல்வர் வாழ்த்து
14வது சீசன் ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை அணியிடம் இருந்து அருமையான ஆட்டம் வெளிப்பட்டது. 4-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் உலகெங்கிலும் இருக்கிற ஒவ்வொரு ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றியை கொண்டாட சென்னை, தோனிக்காக அன்புடன் காத்திருக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசை: ஜோ ரூட் மீண்டும் முதலிடம்
16 Jul 2025லண்டன் : ஐ.சி.சி.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஜூலை 30-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்
16 Jul 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
கடலூர் மாவட்டத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல்
16 Jul 2025சிதம்பரம் : கடலூர் மாவட்டத்தில் நேற்று விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடினார்.
-
தோல்வி குறித்து சிராஜ்
16 Jul 2025லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில்
-
'ஒரணியில் தமிழ்நாடு' திட்டம் மூலம் 1 கோடியே 35 லட்சம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர் : கட்சி தலைமை அறிவிப்பு
16 Jul 2025சென்னை : தி.மு.க.வின் ஒரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு திட்டத்தில் 1 கோடியே 35 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
-
மகளிர் டி-20 தரவரிசை: டாப் 10-ல் ஷபாலி வர்மா
16 Jul 2025லண்டன் : மகளிர் டி-20 ஐ.சி.சி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
ரோகித், விராட் கோலி ஓய்வு குறித்து முதல்முறையாக பி.சி.சி.ஐ. விளக்கம்
16 Jul 2025மும்பை : ரோகித், விராட் கோலி ஓய்வு குறித்து முதல்முறையாக பி.சி.சி.ஐ. விளக்கமளித்துள்ளது. பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
-
மயிலாடுதுறையில் அரசு விழா: ரூ.113.51 கோடி மதிப்பில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி ரூ.48.17 கோடி மதிப்பிலான 47 முடிவுற்ற பணிகள் திறந்து வைத்தார்
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 48 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 113 கோடியே 51 லட
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
மதுராந்தகத்தில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
17 Jul 2025சென்னை, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மதுராந்தகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
17 Jul 2025புதுடெல்லி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.