முக்கிய செய்திகள்

ம.தி.மு.க.வின் தலைமை கழக செயலாளராக 'துரை' தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Durai-2021-10-20

ம.தி.மு.க தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ பொறுப்பேற்றிருக்கிறார். இதைத்தொடர்ந்து வரும் 25 ம் தேதி அண்ணா நினைவிடம், பெரியார் திடலில் மரியாதை செலுத்தவுள்ளார் துரை வைகோ. மேலும் 25 ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்திய வைகோ, அதில் பேசுகையில் “தொண்டர்கள், நிர்வாகிகள் துரை வைகோவை கட்சிக்கு அழைக்க வேண்டும் என தொடர்ச்சியாக என்னிடம் பேசியும் வலியுறுத்தியும் வந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட செயலாளர் கூட்டம் வைத்து ஆலோசனை செய்தோம். வாக்கெடுப்பு நடத்துவது என்று முடிவு செய்தோம். சிலர் வாக்கெடுப்பு வேண்டாம் என பேசினர். பின்னர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினோம். 

 

அமைப்பு செயலாளர் கண்காணிப்பில் வாக்கெடுப்பு நடந்தது. அதில் துரை வைகோவுக்கு 106 வாக்குகள் பதிவானது. அதில் 104 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் வாய்ப்பு வழங்க கூடாது என தெரிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்தே துரை வைகோ தலைமைக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இனி அவர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பணி செய்வார். மாவட்ட நிர்வாகிகள் உடன் தொடர்பில் இருப்பார். தலைமைக்கழகம் எடுக்கும் முடிவுகளை மாவட்ட நிர்வாகிகளுக்கு கொண்டு செல்வார். மேலும் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செய்வார்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து