முக்கிய செய்திகள்

மேலும் தளர்வு அளிக்கப்படுமா ? மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

stalin-2021-10-21

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். 

 

சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச்செயலர், மருத்துவத்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பண்டிகைக் காலம் நெருங்குவதால் கூடுதல் தளர்வு அல்லது கட்டுப்பாடு விதிப்பது குறித்து இதில் ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து