முக்கிய செய்திகள்

முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் மேலும் நீட்டிப்பு

Teacher exam-2021-10-21

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் ஆகிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  வரும் 31-ம் தேதி வரை ஏற்கனவே அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், வயது உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டதால் கூடுதலாக நவம்பர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் ஆகிய காலி பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு இணையதள வழி வாயிலாக செப். 18 முதல் பெறப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து