முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி விடுதலை நாள் விழா: 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ரங்கசாமி

திங்கட்கிழமை, 1 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் விடுதலை நாள் கொண்டாட்டத்தை தொடர்ந்து பல அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.

பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி விடுதலையானது. இந்நிலையில், புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, நேற்று புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம், கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், கடற்கரை சாலை, பாரதி பூங்கா ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

மேலும், முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி கடற்கரை சாலையில் தேசியக்கொடியை ஏற்றி விடுதலை நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். விடுதலை நாள் கொண்டாட்டத்தில் நடந்த காவல்துறை அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். கொடியேற்றிய பின் முதல்வர் ரங்கசாமி கூறியாதாவது., 

புதுச்சேரியில் 70 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் எந்தவித அச்சமும் தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். புதுச்சேரியில், போதுமான அளவு தடுப்பூசிகள் இருப்பதால், மக்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களின் வளர்ச்சியில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. எனது தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற 6 மாத காலத்தில் பல்வேறு திட்டப்பணிகள்  சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஆதிதிராவிட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.500 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும், வேளாண் தொழிலில் காணப்படும் வேலையாட்கள் பற்றாக்குறையை இயந்திரமயமாக்கல் மூலம் ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது, அரசு துறைகளில் காலியாக உள்ள 10,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். புதுச்சேரியில் கனமழையினால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் 8-ம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படும். மூடப்பட்டுள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளை திறந்து பொது விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தரும் விதத்தில் சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பண்டிகைகள் வருவதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 10 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 10 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து