எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நைஜீரியாவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் லகோஸ் மாகாணம் இயோகி மாவட்டத்தில் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிட பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த அந்த அடுக்குமாடி கட்டிடம் கடந்த திங்கட்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


