முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல்: உலக சுகாதார அமைப்பு கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 14 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல். இதை உலக நாடுகள் தடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்  கூறுகையில்,  

வருமானம் குறைந்த  நாடுகளில் போடப்படும் முதல் டோஸ் தடுப்பூசியை காட்டிலும், வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 6 மடங்கு அதிக அளவில் கொரோனா தடுப்பூசியின்  பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்படுகின்றன.

கொரோனா தடுப்பூசி உலகின் அனைத்து பகுதிகளுக்கும்  சென்றடைய வேண்டும்.ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டபின், குறைந்தது ஒரு வருடத்திற்கு பின்னர்,  பூஸ்டர் டோஸ்கள் பற்றி வளர்ந்த நாடுகள் முடிவெடுக்கலாம். அதுவரை பூஸ்டர் டோஸ் போடுவதை நிறுத்தி வைக்க வேண்டும்.  ஏழை நாடுகளில் முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள் மற்றும்  இணை நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் காத்திருக்கின்றனர். இந்நிலையில், வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஆரோக்கியமான நபர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப் படுவது தற்போதைக்கு பிரதான விஷயம் அல்ல. 

எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதை விட , யாருக்கெல்லாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது தான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

சமீபத்திய பிரிட்டிஷ் ஆராய்ச்சியின் படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர், தடுப்பூசி செலுத்திக் கொண்டவருடன் ஒப்பிடுகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  மரணம் அடைவதற்கான வாய்ப்புகள்  32-மடங்கு அதிகமாக  உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து