Idhayam Matrimony

அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2025      தமிழகம்
India-Meteorological

சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டில் வரும் 21-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தில் வரும் 20-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகி மேற்கு - வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், மாஹேவில் இன்று முதல் வரும் 21-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து