முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி

வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2025      தமிழகம்
RN-Ravi 2023 04 05

புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், மசோதாவுக்கு காலக்கெடு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு விடை காணும் வழக்கின் முடிவு தெரிந்த பிறகு, இதனை விசாரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா மாநில கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கமான நடைமுறையின்படி, கவர்னர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவோ அல்லது விளக்கத்திற்காக திருப்பி அனுப்பவோ வேண்டும். ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் வகையில் அனுப்பி வைத்தார். இதற்கு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

கவர்னரின் இந்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கவர்னரின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும் என்றும் அதேவேளையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களை கவர்னர் கையாளும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல் கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டு விளையாட்டு பல்கலை. மசோதா வழக்கையும் சேர்த்து விசாரிக்க தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் ஹரிஷ்குமார் முறையீடு செய்தார். 2 வழக்குகளும் நேற்று விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு கவர்னர் அனுப்பியது அரசியல் சாசனத்துக்கும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கும் எதிரானது என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. 

மசோதாவுக்கு காலக்கெடு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு விடை காணும் வழக்கின் முடிவு தெரிந்த பிறகு, இதனை விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி தெரிவித்தார். தனக்கு பதவிக்காலம் இன்னும் 4 வாரங்களே இருப்பதால், அதற்கு முன்பாக இவ்வழக்கில் முடிவு தெரியும் எனவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து