Idhayam Matrimony

லைகா தொடர்ந்த வழக்கு: விஷால் பதிலளிக்க உத்தரவு

வியாழக்கிழமை, 16 அக்டோபர் 2025      தமிழகம்
Vishal

Source: provided

சென்னை: லைகா தொடர்ந்த வழக்கு விஷால் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்துக்காக, கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.21.29 கோடி கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இந்த தொகையை திருப்பிக்கொடுக்கும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்துப் படங்களின் உரிமைகளையும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அதை மீறி விஷால் பட நிறுவனம் படங்களை வெளியிட்டு வருவதாகக்கூறி லைகா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடியை 30 சதவிகித வட்டியுடன் வழங்க விஷாலுக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி லைகா நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.செந்தில்குமார் முன்பாக நடந்தது. லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமா ஸ்ரீனிவாசன், நடிகர் விஷால் தற்போது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘மகுடம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். எனவே அந்த படத்துக்காகப் பெறும் தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும் என்றார். அதையடுத்து இதுதொடர்பாக விஷால் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ.17-க்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து