முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் இன்று வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் அவர் மேலும் கூறியது:

சிறுபான்மையினர் பள்ளிகளின் ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது குறித்து வழக்குகள் முடிவுக்கு வந்தால் அந்த ஆசிரியர்களின் பாதுகாப்பையும் தி.மு.க அரசு உறுதி செய்யும். நவம்பரில்தான் இந்தக் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கியுள்ளன. குறைந்த காலத்துக்குள் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவேதான் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறுகின்றன. 

பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் நாளை (இன்று) வெளியிடப்படும். கொரோனா குறைந்து அடுத்தாண்டு வழக்கம்போல பள்ளிகள் திறக்கப்படும்போது சனிக்கிழமை வேலைநாள் என்பது தளர்த்தப்படும். வருங்காலங்களில் பள்ளிகள் தொடங்கும்போது முதலில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும். ஏற்கெனவே அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. 

பள்ளிகளை திறப்பதற்கு முன் வகுப்பறைக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது பெய்யும் மழையால் பிரத்யேக ஆய்வு செய்து அறிக்கையளிக்க மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும்,  பொதுப்பணித் துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையில் சர்ச்சைக்குள்ளான பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு வந்தால் அவர்களை வரவேற்கத் தயாராக உள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து