முக்கிய செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் 2 நாட்கள் கூடுதல் சிறப்பு முகாம்கள்

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      தமிழகம்
Voter-list 2021 11 01

Source: provided

சென்னை : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கூடுதலாக 2 சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. 

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

 

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 01.01.2022 தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 01.11.2021 முதல் 05.01.2022 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மேலும், வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக 13.11.2021, 14.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 (சனிக்கிழமை மற்றும் ஞயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றது.  எனினும், கனமழை காரணமாக சில மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் தொடர்பான நடிவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, தகுதிவாய்ந்த வாக்காளர்கள் தங்களது பெயரைச் சேர்ப்பதற்கும் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக 20.11.2021 (சனிக்கிழமை) மற்றும் 21.11.2021 (ஞயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் கூடுதலாக சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து