முக்கிய செய்திகள்

சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல மீண்டும் அனுமதி : பம்பையில் குளிக்க தடை நீடிக்கிறது

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      ஆன்மிகம்
Sabarimala 2021 10 16

Source: provided

பம்பை : பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் திவ்யா தெரிவித்துள்ளார்.

கனமழை மற்றும் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நேற்று சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா தெரிவித்திருந்தார். கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை காரணமாக பம்பை ஆற்றுப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனை கருத்தில்கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா கூறியிருந்த நிலையில், தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. பம்பையில் வெள்ளம் குறைந்ததால் ஆன்லைன் பதிவு செய்த பக்தர்களுக்கு சபரிமலையில் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து