முக்கிய செய்திகள்

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      விளையாட்டு
Sports53

Source: provided

பாலி: இந்தியாவின் பி.வி.சிந்து இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின்  யுவோன் லியுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 21-12 21-18 என்ற செட் கணக்கில் யுவோன் லியை  வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியினால் இந்தியாவின் பி.வி.சிந்து இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்  போட்டி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து