முக்கிய செய்திகள்

திருப்பதியில் அடுத்த மாதத்துக்கான இலவச தரிசன அனுமதி அட்டை : இன்று இணையத்தில் வெளியீடு

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      ஆன்மிகம்
thirupathi-2021-04-29

Source: provided

திருப்பதி : திருப்பதியில் அடுத்த மாதத்துக்கான (டிசம்பர்) இலவச தரிசன அனுமதி அட்டை இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட் டோக்கன்) நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அடுத்த மாதத்துக்கான (டிசம்பர்) இலவச தரிசன அனுமதி அட்டை இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் திருமலையில் தங்குவதற்கான அறைகள் டிசம்பர் மாதத்துக்கான ஒதுக்கீடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து