முக்கிய செய்திகள்

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      உலகம்
Earthquake 2021 07 03

Source: provided

லிமா : பெரு நாட்டின் வடக்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  அதிகாலை 5.52மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.5 புள்ளகளாக பதிவானது. வடமேற்கு கடலோர நகரமான பாரான்காவில் இருந்து 42 கி.மீ தொலைவில் சுமார் 112 கிமீ ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக மக்கள் அலறிஅடித்து சாலைகளில் திரண்டனர்.

பல இடங்களில் வீடுகள், கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. நான்கு நூற்றாண்டுகளை கடந்த தேவாலயத்தில் இருந்த 14மீட்டர் கோபுரம் இதில் இடிந்து தரைமட்டமானது. இதேபோல் தெற்கு ஈக்வடாரில் உள்ள தேவாலயமும் நிலநடுக்கத்தில் சேதமடைந்தது. கொலம்பியாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து