முக்கிய செய்திகள்

வோடஃபோன், ஏர்டெலை தொடர்ந்து 'ஜியோ' கட்டணமும் உயர்வு: டிசம்பர் 1ம் தேதி முதல் அமல்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      வர்த்தகம்
jio-digital-2021-11-29

வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ஜியோ நிறுவனமும் தனது ப்ரீபெய்ட் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்தஅதிகரிக்கப்பட்ட கட்டண உயர்வு டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சமீபத்தில் வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆகியவை தங்களின் ப்ரீ பெய்ட் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தன. ஆனால், ஜியோ நிறுவனம் மட்டும் உயர்த்தாமல் இருந்தது. இந்நிலையில் டிசம்பர் 1ம் தேதி முதல் ப்ரீ பெய்ட் கட்டணத்தை 20 முதல் 21 சதவீதம் உயர்த்தி ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், வோடஃபோன், ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பிடும்போது ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு குறைவுதான்.

இது குறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது., உண்மையான டிஜிட்டல் வாழ்க்கையில் ஒவ்வொரு இந்தியரும் வலிமையாக இருக்கும் நோக்கில், தொலைத்தொடர்பு துறையை மேலும் வலுப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதற்காக ஜியோ புதிய அன்-லிமிடட் பிளானை அறிமுகப்படுத்துகிறது.

நாங்கள் அறிமுகப்படுத்தும் திட்டங்கள் தொலைத்தொடர்பு துறையில் சிறந்ததாக இருக்கும். குறைந்த கட்டணத்தில் சிறந்த தரமான தொலைத் தொடர்பு வசதியை உலகிலேயே ஜியோ மட்டுமே வழங்குகிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அந்த பயனை அனுபவிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து