முக்கிய செய்திகள்

இதுவரை 'ஒமைக்ரான்' வைரஸ் 17 நாடுகளில் பரவியதாக தகவல்

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      உலகம்
Omicron-virus 2021 11 30

Source: provided

லண்டன் : இதுவரை 'ஒமைக்ரான்' வைரஸ் 17 நாடுகளில் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ள நாடுகளில் நோய் மேலும் பரவி விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

‘ஒமைக்ரான்’ புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நாடுகளில் நோய் மேலும் பரவி விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். 

இதுவரை நோய் பரவியுள்ள 17 நாடுகள் விவரம் வருமாறு., 1. தென்ஆப்பிரிக்கா, 2. ஹாங்காங், 3,. போட்ஸ்வானா, 4. ஆஸ்திரேலியா, 5. இத்தாலி, 6. ஜெர்மனி, 7. நெதர்லாந்து, 8. இங்கிலாந்து, 9. இஸ்ரேல், 10. பெல்ஜியம், 11. சுவிட்சர்லாந்து, 12. கனடா, 13. பிரான்சு, 14. ஸ்பெயின், 15. போர்ச்சுக்கல், 16. டென்மார்க், 17. செக் குடியரசு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து