முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பால் இதுவரை ராணுவத்தில் 190 பேர் உயிரிழப்பு: பாராளுமன்றத்தில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

கொரோனா பாதிப்பால் இதுவரை ராணுவத்தில் 190 பேர் உயிரிழந்திருப்பதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக பாதுகாப்பு படையினர் 190 பேர் உயிரிழந்துள்ளதாக பாராளுமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 137 பேர் தரைப்படையை சேர்ந்தவர்கள். கொரோனா மரணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்  அஜய் பட் பதில் அளித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கொரோனா பேரிடர் காலத்தின்போது ராணுவத்தின் தரைப்படையில் 45,576 பேருக்கும், விமானப்படையில் 14,022 பேருக்கும், கடற்படையில் 7,747 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினர் 1,311 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 114 பேர் விமானப்படையில் பணியாற்றுவோரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

ராணுவத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பொதுமக்களில் 276 பேர் உயிரிழந்துள்ளனர். விதிமுறைப்படி தொற்று நோயால் உயிரிழந்தவர்களுக்கு சிறப்பு இழப்பீடு ஏதும் அளிக்கப்படவில்லை. ஆனால் பணியின் போது உயிரிழந்தால் கிடைக்கும் பலன்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து