முக்கிய செய்திகள்

வேதா இல்ல விவகாரம்: மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அ.தி.மு.க. மனு

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக் கோரி அ.தி.மு.க. சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் முந்தைய அ.தி.மு.க. அரசு சட்டம் இயற்றியது. அதனைத் தொடர்ந்து அரசின் இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்களான தீபா, தீபக் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்று தெரிவித்த ஐகோர்ட், ஜெயலலிதா வாரிசுகள் என அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் வேதா இல்லத்தின் சாவியை மூன்று வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் அ.தி.மு.க. மேல்முறையீடு செய்யும் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்த நிலையில் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து