முக்கிய செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை: சிங்கப்பூர் அரசு

சனிக்கிழமை, 4 டிசம்பர் 2021      உலகம்
omicron-2021-12-02

டெல்டா உள்ளிட்ட மற்ற வகை கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என சிங்கப்பூர் மருத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வகை வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இந்நிலையில், ஒமைக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என சிங்கப்பூர் அரசு தெரிவித்திருக்கிறது.

கொரோனாவுக்கு ஏற்பட்ட அதே அறிகுறிகள் தான் ஒமைக்ரான் வைரசுக்கும் தென்படுவதாக தெரிவித்துள்ள சிங்கப்பூர் மருத்துவ அமைச்சகம், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் ஒமைக்ரானை கட்டுப்படுத்துவதில்லை என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் ஏதுமில்லை என கூறியுள்ளது. மற்ற வகை கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்றும் சிங்கப்பூர் மருத்துவ அமைச்சகம் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 30-க்கும் அதிகமான நாடுகளில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து