எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பையில் நடைபெற்று வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 47.5 ஓவர்கள் வீசி இந்திய அணியின் 10 விக்கெட்களையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.
இந்தியா பேட்டிங்...
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். புஜாரா, கேப்டன் விராட் கோலி டக்அவுட்டில் வெளியேறிய நிலையில் இந்திய அணி 90 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
2-வது நாள்....
முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் அடித்திருந்தது. மயங்க் 120 ரன்களுடனும், சகா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாளான நேற்று காலை மேலும் 2 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சகா ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமல் அஜாஸ் படேல் பந்துவீச்சிற்கு விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த அக்ஸர் படேல் மயங்க் அகர்வால் உடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
325 ரன்களுக்கு...
அரைசதம் அடித்த அக்ஸர் மேலும் 2 ரன்களை சேர்த்தநிலையில் ஆட்டமிழந்தார். எனினும் தொடர்ந்து விளையாடிய மயங்க் அகர்வால் 150 ரன்களை குவித்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மயங்க் அடித்த 150 ரன்களில் 17 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களும் அடங்கும். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுடன் வெளியேற இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 325 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.
அனைத்து விக்கெட்...
இந்தப் போட்டியில் மும்பையை பூர்வீகமாக கொண்ட நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 47.5 ஓவர்கள் வீசி இந்திய அணியின் 10 விக்கெட்களையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


