முக்கிய செய்திகள்

வரும் 9-ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை மையம்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      தமிழகம்
Weather-Center 2021 06-30

Source: provided

சென்னை : தமிழகத்தில் வரும் 9-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது, 

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

நாளை தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தில் வரும் 9-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து