முக்கிய செய்திகள்

அமீர் நடிக்கும் புதிய படம்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      சினிமா
Aamir 2021 12 05

Source: provided

கதையின் நாயகர்களாக அமீர் மற்றும் ஆர்யாவின் தம்பி –சத்யாவும் நடிக்க, நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்புதிய படத்தை ”அமீர் ஃபிலிம் கார்ப்பரேசனும்””JSM பிக்சர்ஸும்” இணைந்து தயாரிக்கின்றது. யுவன் ஷங்கர் ராஜா இசையில், சினேகனின் பாடல் வரிகளில் ஒரு பாடல் பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மேலும் படத்தில் வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ”மெளனம் பேசியதே”, “ராம்”, “பருத்திவீரன்” ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தின் ஒளிப்பதிவை  ராம்ஜி மேற் கொள்கிறார். கலை இயக்கம் வீரமணி, படத்தொகுப்பு அஹமது, மக்கள் தொடர்பு நிகில் ஆகியோரின் தொழில்நுட்பப் பங்களிப்பில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தை, ரமேஷ்கிருஷ்ணன் இயக்குகிறார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து