முக்கிய செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங்கிற்கு பெங்களூருவில் சிகிச்சை

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      தமிழகம்
Varun-Singh--2021-12-09

Source: provided

சென்னை : நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங்கிற்கு பெங்களூருவில் சிகிச்சையளிக்கப்பட உள்ளது. இதற்காக அவர் கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் அவர் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று முன்தினம் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் கேப்டர் வருண் சிங் பலத்த தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அவருக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் அவரை பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. இதற்கிடையே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து விளக்கமளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயிருடன் மீட்கப்பட்ட வருன் சிங்கிற்கு தேவையான உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என்று நேற்று தெரிவித்தார். 

இந்நிலையில் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வருன் சிங் நேற்று ஆம்புலன்ஸ் மூலம் கோவை விமானநிலையம் கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் அவர் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர் குரூப் கமாண்டர் வருண் சிங். இவர் ஒருவர் மட்டும் தற்போது உயிர்பிழைத்துள்ள நிலையில் அவரை காப்பாற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து