முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவுக்கு தலாய் லாமா இரங்கல்

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவுக்கு திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களது மறைவுக்கு உலகம் முழுவதிலிருந்தும் இரங்கல் செய்தி வந்துக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா பிபின் ராவத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது., ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் சக அதிகாரிகளுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் இறந்த அனைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தின் சேவையில் தளபதி ராவத்தின் நீண்டகால பங்களிப்பை நான் வணங்குகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து