முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாதாந்திர மின்‌ கணக்கீடு முறையை உடனே செயல்படுத்த வேண்டும் : தமிழக முதல்வருக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

சென்னை : மாதாந்திர மின்‌ கணக்கீடு நடைமுறையை உடனடியாகச்‌ செயல்படுத்த வேண்டும்‌ என்று தமிழக முதல்வருக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்‌ பயன்‌ அளவீடு செய்யப்படுவதால்‌ அதிகமாக மின்‌ கட்டணம்‌ வசூலிப்பதைத்‌ தவிர்க்கும்‌ வகையில்‌ மாதம்‌ ஒரு முறை மின்‌ உபயோகம்‌ கணக்கிடும்‌ முறை கொண்டு வரப்படும்‌. இதனால்‌ இரண்டு மாதங்களுக்கு ஆயிரம்‌ யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம்‌ பயன்படுத்துவோர்‌ ஆண்டுக்கு 6,000 ரூபாய்‌ வரையில்‌ பயன்‌ பெறுவர்‌ என்று தி.மு.க. தேர்தல்‌ அறிக்கையில்‌ வாக்குறுதி தரப்பட்டது. 

அண்மையில்‌, டெல்லியில்‌ மத்திய அமைச்சரை சந்தித்த தமிழக மின்சார துறை அமைச்சர்‌, உள்கட்டமைப்புகளை பலப்படுத்திய பின்‌ தமிழகத்தில்‌ மாதாந்திர மின்‌ கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும்‌ என்று கூறியுள்ளார்‌.  இதனுடைய உள்ளார்ந்த பொருள்‌, நீட்‌ தேர்வு ரத்து, ஏழு பேர்‌ விடுதலை, கல்விக்‌ கடன்‌ ரத்து போன்ற அறிவிப்புகள்‌ போல்‌ இதுவும்‌ குழிதோண்டி புதைக்கப்படும்‌ என்பதுதான்‌.

உட்கட்டமைப்பு பணிகள்‌ எப்போது முடிந்து இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும்‌ என்பதற்கு ஏதாவது கால அளவு இருக்கிறதா என்றால்‌, நிச்சயம்‌ இல்லை. அமைச்சர்‌ ‌ ஏதாவது கால அளவை குறிப்பிட்டு இருக்கிறாரா என்றால்‌ அதுவும்‌ இல்லை.  எனவே உள்கட்டமைப்புகள்‌ பலப்படுத்தப்பட்ட பின்‌ மாதாந்திர பின்‌ கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும்‌ என்ற இந்த வாக்குறுதி அதோகதி என்பது சூசகமாகத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அ.தி.மு.க.  சார்பில்‌ கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. 

கொரோனா கொடுந்தொற்று, விஷம்‌ போல்‌ எறும்‌ விலைவாசி, வேலையின்மை, ஊதிய உயர்வின்மை என பல‌ பிரச்சனைகளை மக்கள் சந்தித்துக்‌ கொண்டிருக்கின்ற நிலையில்‌, மாதாந்திர மின்‌ கணக்க்டு நடைமுறையை உடனடியாகச்‌ செயல்படுத்த வேண்டும்‌ என்று தமிழக முதல்வரை கேட்டுக்‌ கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து