முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப்ளஸ்-2 பொதுத்தேர்வை எழுதும் தமிழ் பயிற்று மொழி மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து முழு விலக்கு: தமிழக அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில் தமிழை பயிற்று மொழியாக கொண்ட மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குநர் சேது ராமவர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்துள்ள அந்த உத்தரவில், இந்த தேர்வு கட்டண விகிதத்தில், தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பொதுத்தேர்வில் முதன்முறையாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமன்றி கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. போலவே அரசு & உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் MBC, SC, ST, SCA மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து