முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவிடம் கடன் தவணை சலுகை திட்டங்களை கேட்கும் இலங்கை

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

இலங்கை வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி-யிடம் கடன் தவணை சலுகைத் திட்டங்கள் குறித்து இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச பேச்சுவாா்த்தை நடத்தினார்.

கொரோனா பாதிப்பால் இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீனாவிடம் ஏராளமாக கடன் வாங்கியுள்ள இலங்கை, நிகழாண்டில் 200 கோடி டாலா் (சுமாா் ரூ. 14,855 கோடி) வரை கடன் தொகையை திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது.  

இந்நிலையில், இலங்கை-சீனா இடையிலான தூதரக உறவு தொடங்கியதன் 65-ஆவது ஆண்டையொட்டி, இரு நாள் பயணமாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி நேற்று முன்தினம் இலங்கை வந்தார். அவருக்கும், அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கும் இடையிலான சந்திப்பு அதிபா் மாளிகையில்  நடைபெற்றது. இந்தச் சந்திப்பை தொடா்ந்து, அதிபா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஏற்கெனவே பொருளாதார பிரச்னையால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடன் தவணை சலுகைத் திட்டங்களை சீனா அறிவித்தால் இலங்கைக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என சீன வெளியுறவு அமைச்சரிடம் அதிபா் கோத்தபய வேண்டுகோள் வைத்தாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சீனாவிலிருந்து இறக்குமதி சலுகை வா்த்தக கடன் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தால், நாட்டில் தொழிற்சாலைகளை சுமுகமாக நடத்துவதற்கு உதவியாக இருக்கும் எனவும் அந்தச் சந்திப்பின்போது அதிபா் கோத்தபய கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து