முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமைக்ரானுக்கான தனி தடுப்பூசி மார்ச்சில் வரும்: பைஸர் மருந்து நிறுவனம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 11 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

ஒமைக்ரான் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு என தனி தடுப்பூசி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் மார்ச்சில் அது பயன்பாட்டுக்கு வருமென்றும் பைஸர் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பைஸர் தலைமைச் செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

வேகமாக பரவும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு அரசுகளும் பிரத்யேக தடுப்பூசியைக் கேட்டு வருவதால் இந்தத் தடுப்பூசியை தயார் செய்து வருகிறோம். இந்த தடுப்பூசி மார்ச்சில் தயாராகி விடும். ஆனால் இது நமக்குத் தேவைப்படுமா? இல்லை இது எப்படிப் பயன்படுத்தப்படும் எனத் தெரியாது என்று அவர் கூறினார்.

மேலும், இப்போது உள்ள தடுப்பூசிகளும், பூஸ்டர் டோஸ்களுமே கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை தருகிறது. அதே வேளையில் ஒமைக்ரானுக்கு என தனியாக தடுப்பூசியை கண்டுபிடிப்பதன் மூலம் பிரேக்த்ரூ தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம் என்றார். 

இதே போல் மாடர்னா நிறுவன செயல் அதிகாரி ஸ்டெபானி பான்செல் அளித்த பேட்டி ஒன்றில், ஒமைக்ரான் மட்டுமல்லாது இனி ஏதும் புது உருமாறிய வைரஸ் வந்தாலும் எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசியைத் தயாரித்து வருகிறோம். அதனை இந்த ஆண்டிலேயே கொண்டு வருவோம். இருப்பினும் இப்போதைக்கு பூஸ்டர் டோஸ்கள் தான் சிறந்தது என உலக சுகாதாரத் தலைவர்களுக்கு வலியுறுத்தி வருகிறோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து