முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா ஓபன் பேட்மிண்டன்: அடுத்த சுற்றுக்கு சாய்னா, லக்சயா, பிரனோய் தகுதி

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு சாய்னா, லக்சயா, பிரனோய் தகுதி பெற்றுள்ளனர்.

2-ம் சுற்றுக்கு...

சாய்னாவை எதிர்த்து விளையாடிய செக் குடியரசு வீராங்கனை முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் இந்தியாவின் சாய்னா நேவால், லக்சயா சென் மற்றும் பிரனோய் ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். 

காயத்தில் இருந்து...

முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான சாய்னா, கடந்த இரண்டு ஆண்டுகளாக காயம் காரணமாக ஏராளமான போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்டு பழைய உற்சாகத்துடன் களமிறங்கிய சாய்னா, இந்தியா ஓபன் முதல் சுற்று ஆட்டத்தில் செக்  குடியரசின் தெரேசா ஸ்வாபிகோவாவை எதிர்கொண்டார். 

மால்விகாவை... 

இப்போட்டியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக செக் குடியரசு வீராங்கனை பாதியில் வெளியேறினார். இதனால் சாய்னா நேவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சாய்னா 2ம் சுற்றுக்கு முன்னேறினார். சாய்னா இனி இரண்டாவது சுற்றில் மற்றொரு இந்திய வீராங்கனை மால்விகாவை எதிர்கொள்கிறார்.

மஞ்சுநாத்துடன்... 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரனோய், ஸ்பெயின் வீரர் பாப்லோ அபியானை 21-14, 21-7 என்ற செட்கணக்கில் வீழ்த்தி 2ம் சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் மிதுன் மஞ்சுநாத்துடன் மோத உள்ளார். லக்சயா சென் எகிப்தின் ஆதம் ஹாதமை 21-15, 21-7 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். 2வது சுற்றில் லக்சயா சென்  ஸ்வீடன் நாட்டின் பெலிக்சை சந்திக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து