முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 பேருக்கு ஒமைக்ரான் ; சீனாவில் இரும்பு பெட்டிக்குள் வாழும் 2 கோடி மக்கள்

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

2 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறியால் சீனாவில் இரும்பு பெட்டி முகாமுக்குள் 2 கோடிபேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

சீனா நாட்டில் உகானில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனா வைரசின் புதிய மாறுபாடு ஒமைக்ரான் உலகில் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில், இந்த மாறுபாட்டை தவிர்க்க சீனா தனது நாட்டில் கடுமையான விதிகளை அமல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. உண்மையில், 55 லட்சம் மக்கள்தொகை கொண்ட அன்யாங்கைத் தவிர மற்ற நகரங்களில் ஓமைக்ரான் பதிப்பு 2 பேருக்கு மட்டுமே கண்டறியப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் அந்நாட்டு அரசு அடைத்து வைப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள் கொண்ட முகாம்கள்  நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஷிஜியாசுவாங் மாகாணத்தில் 108 ஏக்கர் பரப்பளவில் தனிமைப்படுத்தப்பட்ட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. 

கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அனைவரும் ஒரு படுக்கை, கழிப்பறை மட்டுமே உள்ள இரும்பு பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் யாராவது ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் கூட அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு இரும்பு பெட்டிகளில் 2 வாரம் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து