முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகரவிளக்கு சீசனில் சபரிமலை கோவிலுக்கு ரூ.147 கோடி வருமானம்

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில் 147 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக சபரிமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகர ஜோதியை தரிசனம் செய்தனர். மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

மகரவிளக்கு காலம் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை 6.30 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் இதுவரை 147 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக சபரிமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து