முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி அரசியலில் பரபரப்பு: பா.ஜ.கவில் இணைந்தார் முலாயம் சிங் மருமகள்

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்னா யாதவ் பா.ஜ.கவில் இணைந்தார். நான் எப்போதுமே பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தேன் என்று அபர்னா யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் மார்ச் மாதம் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தேர்தலுக்கு முன்பே பா.ஜனதா கட்சியில் இருந்து விலகிய மந்திரிகள், சில எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து விட்டனர்.  இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மருமகள் அபர்ணா யாதவ் பா.ஜனதாவில் இணைந்தார். இவர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பர்திக் யாதவின் மனைவி ஆவார். 

முலாயம் சிங் யாதவின் மருமகளான அபர்னாயாதவ் பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளது சமாஜ்வாடி கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப் படுகிறது. இவர் கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் லக்னோகாண்ட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் நேற்று முறைப்படி பாஜகவில் இணைந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.,

பாஜக தலைமைக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு எப்போதுமே தேசம் தான் முக்கியம். பிரதமர் மோடி செய்துள்ள பணிகள் என்னை ஈர்க்கின்றன. பிரதமர் மோடியை நான் மனமார பாராட்டுகிறேன். நான் எப்போதுமே பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையால் ஈர்க்கப்பட்டேன். நான் தற்போது நாட்டிற்காக சிறப்பாக பணியாற்ற விரும்புகிறேன். பாஜகவின் திட்டங்களால் நான் எப்போதும் ஈர்க்கப்பட்டே வந்துள்ளேன். பாஜக வளர்ச்சிக்காக என்னால் முடிந்ததைச் செய்வேன்.

பிரதமர் மோடி, பாஜகவின் கொள்கைகள் குறித்து நான் எப்போதும் பேசி வருகிறேன். தேசிய சிந்தனைக்காக குரல் கொடுத்து வருகிறேன். தேசியம் என் வாழ்வின் மிக முக்கியமான அம்சம். நான் எதற்கும் முன்பும் எப்போதும் தேசத்தைப் பற்றியே நினைத்தேன். தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் முடிவு செய்ய இயலாது. பாஜக தலைமை என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன்’’ என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து