முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதுரங்க விளையாட்டு வீரருக்கு ரூ. 8 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

சதுரங்க போட்டியில் 2019-ம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம்  மற்றும் 2022-ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழகத்தை சேர்ந்த செல்வன் பரத் சுப்ரமணியத்திற்கு  ரூ. 8 லட்சம் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னையில் 9-ம் வகுப்பு படித்து வரும் செல்வன் பரத் சுப்ரமணியன், 2013-ம் ஆண்டு முதல் தனது ஐந்தாவது வயதிலிருந்து மாநில, தேசிய மற்றும் சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று சிறப்பாக விளையாடிய செல்வன் பரத் சுப்ரமணியம் 

2019-ம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்றார். மேலும், 2022-ம் ஆண்டில் தனது 14-வது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். செல்வன். பரத் சுப்ரமணியத்திற்கு 2019-ம் ஆண்டு சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்றமைக்காக 3 லட்சம் ரூபாயும், 2022-ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றமைக்காக 5 லட்சம் ரூபாயும் சேர்த்து, மொத்தம் 8 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையினை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 

இந்நிகழ்வின்போது, அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  முதன்மைச் செயலர் அபூர்வா, பயிற்சியாளர் ஷியாம் சுந்தர் மற்றும் செல்வன் பரத் சுப்ரமணியத்தின் பெற்றோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து