முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர்களுக்கு நாளை விடுமுறை: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

வரும் ஜனவரி 22 ஆம் தேதி, சனிக்கிழமை (நாளை) ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வருகிற ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நாள்களில் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் இன்றி பள்ளிகள் செயல்படுவதால் வருகிற ஜனவரி 22 - சனிக்கிழமை (நாளை) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அன்றைய தினம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து