முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை இனி செம்மொழிச்சாலை என பெயர் மாற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

2010 முதல் 2019-ம் ஆண்டுகள் வரையிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

தி.மு.க. ஆட்சி தமிழுக்கு ஆற்றிய பணிகளின் தொடர்ச்சியாக இந்த விழாவில் சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை இனி செம்மொழிச்சாலை எனப் பெயர் மாற்றம் செய்யப்படும்.

செம்மொழிச் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக் கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கான நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்.

தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. பழமைக்குப் பழமையாய் -புதுமைக்கு என்றும் புதுமையாய் இருக்கக்கூடிய நம்முடைய தமிழ் மொழி குறித்த ஆய்வுகள் தமிழகத்தோடு, இந்திய எல்லையோடு முடிந்து விடாமல் உலகளாவியதாக அமைய வேண்டும். உலக மொழியியல் கோட்பாடுகளை உள்ளடக்கியதாக நமது ஆய்வுகள் அமைய வேண்டும். செம்மொழி நிறுவனம் முன்வைத்துள்ள இலக்குகளை அடைய, தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து