முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் புதிதாக 30,744 பேருக்கு கொரோனா பாதிப்பு

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று முன்தினம் 29,870 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்றைய தொற்று பாதிப்பு 30,744 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,744 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 31 லட்சத்து 3 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்புக்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 37,178 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1.94 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 6,452 ஆக உள்ளது. நேற்று 7,038 ஆக இருந்த பாதிப்பு 6,452 ஆக குறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து