முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலகும் கோலியின் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்: முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

விராட் கோலி இன்னும் 2 ஆண்டுகள் கேப்டனாக இருந்திருக்கலாம் என்றும், நீண்ட காலமாக அணியை வெற்றிகரமாக வழிநடத்தியதால், டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகும் கோலியின் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

நம்பர் ஒன்னாக...

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி திடீரென அறிவித்தது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தை புரட்டிப் போட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு மோசமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய இந்திய அணியில் பல அதிரடியான மாற்றங்களை செய்த அவர் அதன் பின் 5 வருடங்களாக தொடர்ந்து நம்பர் ஒன் அணியாக இந்தியாவை ஜொலிக்க வைத்தார். மொத்தம் 68 போட்டிகளில் 40 வெற்றிகளை இந்தியாவுக்காக பெற்றுத் தந்துள்ள அவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

திடீர் விலகல் முடிவு...

விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு வந்ததால், மாற்று கேப்டன் குறித்து பி.சி.சி.ஐ தரப்பு அதுவரை முடிவு செய்யாமல் இருந்தது. திடீரென விராட்கோலி விலகியதால், அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலியின் கேப்டன்சி சகாப்தம் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், ''

இன்னும் 2 ஆண்டு... 

நிச்சயமாக விராட் கோலி இன்னும் 2 ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தியிருக்க முடியும். ஏனென்றால் அடுத்த இரண்டு வருடங்கள் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடும். தனது கேப்டன்சியின் கீழ் 50 முதல் 60 வெற்றிகளைப் பெற்றிருப்பார். ஆனால் பலரால் அதை ஜீரணிக்க முடியவில்லை. இருப்பினும், நீண்ட காலமாக அணியை வெற்றிகரமாக வழிநடத்தியதால், டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகும் கோலியின் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்'' என்று ரவி சாஸ்திரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து